200
தேவையான பொருட்கள்
இட்லி புழிங்கலரிசி – ஒரு கப்
துவரம்பருப்பு – அரை கப்
வெங்காயம் (அ) தேங்காய் துருவல் – அரை கப் (நறுக்கியது)
கடலை பருப்பு – கால் கப்
பாசிப் பருப்பு – கால் கப்
பச்சரிசி – இரண்டு டேபிள்ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – எட்டு
பெருங்காய தூள் – சிறிதளவு
கறிவேப்பலை – சிறிதளவு
செய்முறை
அரிசி, பருப்பு தண்ணீரில் ஊறவைத்து வடித்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பலை, பெருங்காய தூள், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, இறுதியாக வெங்காயம் (அ) தேங்காய் திருவல் சேர்த்து அரைத்துகொள்ளவும்.
இந்த மாவை ஒரு மணி நேரம் கழித்து சூடான தவாவில் அடையாக ஊற்றி, நடுவில் ஐந்து இடங்களில் துளை இட்டு அங்கும் அடையை சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.