தேவையான பொருட்கள்
அயிலை மீன் – 6 துண்டு
தேங்காய் எண்ணெய் – மூன்று தேகேரண்டி
வெந்தயம் – கால் டீஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு
இஞ்சி – கால் டீஸ்பூன்
பூண்டு – பத்து பல் (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – பத்து
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
தனியாதூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – நான்கு டீஸ்பூன்
புளி கரைச்சல் – ஒரு கப்
தண்ணீர் – தேவைகேர்ப்
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை
சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு பொன் நிறமாக வந்ததும் தக்காளி, உப்பு, தனியாதூள், மிளகாய் தூள், புளி கரைச்சல், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து பதினைந்து நிமிடகள் கொதிக்கவிடவும்.
பிறகு, மீன் போட்டு மெதுவாக கலக்கி விட்டு மூன்று நிமிடகள் கழித்து கறிவேப்பலை, தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி ஏறகவும்.