தேவையான பொருட்கள்
இடித்த மசாலா செய்ய:
காய்ந்த மிளகாய் – ஆறு
தனியா – இரண்டு டீஸ்பூன்)
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – முக்கால் டீஸ்பூன்
கடலை பருப்பு – இரண்டு டீஸ்பூன்
உருளை இடித்த மசாலா செய்ய:
தண்ணீர் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு’
உப்பு – தேவைகேற்ப
உருளைக்கிழங்கு – ஒரு கப் (தோலுரித்தது)
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பலை – சிறிதளவு
பூண்டு – ஆறு பல் (இடித்தது)
செய்முறை
காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கடலை பருப்பு ஆகியவற்றை நன்றாக பொன் நிறமாக வறுத்து பொடிசெய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து அரைவேக்காடு வெந்ததும் எறக்கி வடிகட்டி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும் பொன்னிறம் வந்தவுடன் ஏறகிவைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இடித்த பூண்டு, கறிவேப்பலை, பொறித்த உருளைக்கிழங்கு, இடித்த மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி மூன்று நிமிடம் கழித்து இரகவும்.