தேவையான பொருட்கள்
எண்ணெய் – மூன்று டீஸ்பூன்
பூண்டு – நான்கு பல் (பொடியாக நறுக்கியது)
செல்லரி – சிறிதளவு
ஸ்ப்ரிங் வெங்காயம் – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
காளான் – அரை கப் (நறுக்கி சுத்தம் செய்தது)
கோழி கறி – அரை கப் (அரை வேகாடு வேகவைத்தது)
காய்ந்த மிளகாய் – 5 (அரைத்த விழுது)
சோய சாஸ் – ஒன்றை டீஸ்பூன்
கொத்தமல்லி தண்டு – சிறிதளவு
மிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
சக்கரை – அரை டீஸ்பூன்
தண்ணீர் – தேவைகேற்ப
சாதம் பாசுமதி அரிசி – இரண்டு கப்
கோஸ் திருவல் – கால் கப்
எக்ஆம்லெட் – ஒன்று
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்று காய்த்ததும் பூண்டு, செலரி, ஸ்ப்ரிங் வெங்காயம், கோழி கறி, காளான், சில்லி பேஸ்ட், சோய சாஸ், கொத்தமல்லி தண்டு, மிளகு தூள், சக்கரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி ஐந்து நிமிடம் கழித்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக வரும்வரை வேகவிடவும்.
கெட்டி பதம் வந்தவுடன் பாசுமதி அரிசி, கோஸ் சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் கழித்து இறக்கி பொரித்தெடுத்த முட்டை ஆம்லெட்டை நடுவில் வைத்து பரிமாறவும்.