Tamil

கீமா பொடிமாஸ்

keema podimas

தேவையான பொருட்கள்

கொத்துக்கறி – கால் கிலோ

நல்எண்ணெய் – 5 டீஸ்பூன்

வெங்காயம் – இரண்டு

இஞ்சி – சிறுதுண்டு (விழுதாகவும்)

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

அரைக்க;

காய்ந்த மிளகாய் – மூன்று

மிளகு – பத்து

தனியா – இரண்டு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

மசாலா சாமான்களை வறுத்துப் பொடி செய்யவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது, சுத்தம் செய்த கரியைப் போட்டு வதக்கவும்.

தூள் செய்த மசாலா பொடியை சேர்த்து நீர் ஊற்றி, போதுமான உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

கொத்துக்கறி நன்கு வெந்ததும், குறைந்த தீயில் வைத்து வதக்கி நன்கு டி ரை ஆனதும், துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி ஏறகவும்.

image via seetha’s kitchen