தேவையான பொருட்கள்:
முட்டை – நான்கு
வெங்காயம் – 15௦ கிராம் (நறுக்கியது)
தக்காளி – 15௦ கிராம் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாதூள் – ஒரு டீஸ்பூன்
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
அரைக்க:
தேங்காய் – கால் மூடி
முந்திரிப்பருப்பு – நான்கு
கசகசா – இரண்டு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – நாலு பல்
தாளிக்க:
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
சோம்பு – ஒரு டீஸ்பூன்
செய்முறை
முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.
இத்துடன் வெங்காயம், தக்காளி வதக்கி அரைத்த விழுதை சேர்க்கவும்.
மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் போதுமான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
வேக வைத்த முட்டையைத் தோலுரித்து, இதனுடன் சேர்த்து, சிறிது நேரம் குறைந்த தீயில் வைத்திருந்து ஏறகவும்.
இறக்கியதும் சிறிது கொத்தமல்லி இலை தூவவும்.
image via flickr