தேவையான பொருட்கள்
சோளம் – ஒரு டீஸ்பூன்
குதிரைவாலி – ஒரு டீஸ்பூன்
சாமை – ஒரு டீஸ்பூன்
வரகு – ஒரு டீஸ்பூன்
திணை – ஒரு டீஸ்பூன்
கேழ்வரகு – ஒரு டீஸ்பூன்
கம்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
இஞ்சி – அரை துண்டு
பெருங்காயம் – சிறிதளவு
பார்லி (வறுத்தது) – ஒரு டீஸ்பூன் (பவுடர்)
சுக்கு பொடி – கால் டீஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கேரட்– இரண்டு ஸ்பூன் (நறுக்கியது)
பீன்ஸ் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைகேற்ப
செய்முறை
சோளம், குதிரைவாலி, சாமை, வரகு, திணை, கேழ்வரகு, கம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பெருங்காயம், பார்லி பவுடர், சுக்கு பவுடர், கேரட், பீன்ஸ் கறிவேப்பலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
அடை மாவு பதத்தில்மாவை கலந்துகொள்ளவும்.
பிறகு தவாவில் மாவை அடைபோல் ஊற்றி எண்ணெய் சுற்றி ஊற்றி திருப்பி போட்டு வெந்ததுடன் எடுத்து சூடாக பரிமாறவும்.