330
தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு தேகரண்டி
பட்டை – இரண்டு
லவங்கம் – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
சோம்பு – சிறிதளவு
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
புதினா – சிறிதளவு
தேங்காய் பால் – ஒன்றை கப்
நெய் – ஒரு டீஸ்பூன்
பாசுமதி அரிசி – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, புதினா, தேங்காய் பால், உப்பு போட்டு நன்றாக வதக்கி அரிசி சேர்த்து கிளறி புதினா துவி நெய் ஊற்றி குக்கரை மூடிவிடவும்.
ஐந்து நிமிடகள் மிதமான சூட்டில் வைக்கவும்.
பிறகு அதிகமான சூட்டில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.