தேவையான பொருட்கள்
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)
தேங்காய் பால் – அரை டம்ளர்
நெய் – மூன்று தேகரண்டி
பாசிப் பருப்பு – அரை கப் (நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும், பிறகு அரை வேகாடு வேகவைத்து கொள்ளவும் )
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
புதினா – சிறிதளவு
சாதம் – இரண்டு கப்
செய்முறை
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், பாசிப் பருப்பு, தேங்காய் பால், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பிறகு வடித்த சாதம் போட்டு கிளறி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.
சூடான சுவையான பாசிப் பருப்பு புலாவ் தயார்,
அதிக புரத சத்து உள்ள பாசிப் பருப்பு புலாவ் மிகவும் உடலுக்கு நல்லது.