தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் – அரை கிலோ
வெங்காயம் – 1௦௦ கிராம் (நறுக்கியது)
தக்காளி – 1௦௦ கிராம் (நறுக்கியது)
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 6 பல்
புளி – எலுமிச்சை – கரைக்க
தனியாதூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
இஞ்சி, பூண்டு தட்டி கொள்ளவும்.
நெதிளியை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், தக்காளி இவற்றை ஒன்றின் பின்ஒன்றாக வதக்கவும்.
தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதங்கிய பின் புளிக்கரைச்சலை ஊற்றவும்.
மிளகாய் தூள், தனியாதூள், போதுமான உப்பு சேர்த்து புளிநீர் கொதித்ததும், நெதிளியை போட்டு குறைந்த சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
கலைகளான, மணமான நெத்திலி குழம்பு, உங்களுக்காக.