ஓட்ஸ் பிரியாணி

Tamil 0 comments

oats biryani - ஓட்ஸ் பிரியாணி

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – ஒரு கப்

பட்டை – இரண்டு

லவங்கம் – இரண்டு

ஏலக்காய் – இரண்டு

அன்னாசிபூ – இரண்டு

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – இரண்டு சிறியது (நறுக்கியது)

மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா – கால் டீஸ்பூன்

காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி – ஒரு கப்

உப்ப – தேவையான அளவு

புதினா – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

தயிர் – இரண்டு டீஸ்பூன்

தண்ணீர் – ஒன்றை கப்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

காரட், பீன்ஸ், பச்சை பட்டாணி ஆகியவற்றை பட்டை, லவங்கம், ஏலக்காய், தண்ணீர் ஊற்றி ஒரு வேக்காடு வேகவைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம்,  பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிபூ, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா, வேகவைத்த காய்கறிகள், உப்ப சேர்த்து நன்றாக வதக்கவும்.

புதினா, கொத்தமல்லி, தயிர்  சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஓட்ஸ் போட்டு கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

சூடான சுவையான ஓட்ஸ் பிரியாணி தயார்.

சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு.

Image credit

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*