தேவையான பொருட்கள்
குதிரை வாலி – இரண்டு கப்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
கடலை பருப்பு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – மூன்று
குடைமிளகாய், காரட், பீன்ஸ், கோஸ் கலவை – ஒரு கப்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
கடாயில் குதிரை வாலியை போட்டு வறுத்து எடுக்கவும் (குதிரை வாலி உப்பி வரும்வரை).
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடனதும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, குடைமிளகாய், காரட், பீன்ஸ், கோஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கறி பாதி வெந்ததும், தண்ணீர் எட்டு கப் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு குதிரை வாலி சேர்த்து கொத்தமல்லி துவி வேகவைத்து பனிரெண்டு நிமிடம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்.
தேவையானால் வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.
உடல் எடை குறைய மிக சிறந்த உணவு இது.