தேவையான பொருட்கள்
முட்டை – 6
தேங்காய் – அரை மூடி
கொத்தமல்லி –ஒரு கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – இரண்டு
புதினா – ஒரு டீஸ்பூன்
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்
தக்காளி – ஒன்று (நறுக்கியது)
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப
செய்முறை
தேங்காயை நீர்விட்டு அரைத்து, கொத்தமல்லி, மிளகாய், புதினா, இஞ்சி விழுது சேர்த்து எடுத்து கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு ஆனதும் சீரகம் சேர்த்து தாளித்ததும், தக்காளியை சேர்க்கயும்.
இதனுடன் அரைத்த விழுதுகளை சேர்த்து, போதுமான உப்பு சேர்த்து ஐந்து நிமிடகள் கொதிகவிடயும்.
முட்டையை கழுவி, அப்படியே போட்டு வேகும் வரை கொதிக்கவிட்டு எக் கறி கொத்தமல்லி துவி இறகவும்.