தேவையான பொருட்கள்
முள்ளங்கி துருவல் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – இரண்டு
தாளிக்க
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்து – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
தேங்காய் துருவல் – தேவைக்கு.
செய்முறை
முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி முள்ளங்கி துருவலைப் போடவும்.
இதில் உப்பு போட்டு தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.
வெந்ததும் தேங்காய்த் திருவல் போட்டு இரக்கவும்.
சூப்பரான முள்ளங்கி பொரியல் தயார்.