தேவையான பொருட்கள்
கடல் மீன் – அரை கிலோ
வெங்காயம் – இறநூறு கிராம் (நறுக்கியது)
தக்காளி – இறநூறு கிராம் (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் எண்ணெய் – ஒரு குழிகரண்டி
அரைக்க
தேங்காய் – ஒரு கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு
தாளிக்க
சீரகம், கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, போட்டு தாளிக்கவும்
வெங்காயம், தக்காளி இவை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், தனியா தூள்,மிளகாய் தூள்,அரைத்த மசாலா தேவைகேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதி வரும்போது மீனை ஒவ்வொ ன்றாக எடுத்துப் போடவும். மீன் வெந்த பிறகு குழம்பை இறகிவிடவும்.
கேரள மீன் குழம்பிற்கு தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் தனி ருசி உண்டு.