செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் – இரண்டு தேகரண்டி
சோம்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – முன்று
இஞ்ச பூண்டு விழுது – இரண்டு ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – தேவைகேற்ப
உரித்த நண்டு – இரண்டு கப்
புளி கரைச்சல் – புளி (எலுமிச்சை பழம் அளவு )
உப்பு – தேவைவயான அளவு
நண்டு மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
(தேங்காய், முந்திரி கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் சோம்பு ) அனைத்தையும் தண்ணீர் உற்றி நன்றாக விழுது போல் அரைத்து கொள்ளவும் .
செய்முறை
கடாய் சூடானதும், எண்ணெய் உற்றி காய்ந்ததும் சோம்பு,கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு நண்டு சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஐந்து நிம்மிடம் கொதிகவிடயும்.
பிறகு புளி கரைச்சல் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பின்னர் அரைத்து வைத்த விழுதை போட்டு கொதிக்கவிடவும் பிறகு கொத்தமல்லி துவி இரக்கவும்.
கார சாரமான நண்டு குர்மா தயார்.