தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு – இரண்டு கப்
நெய் அல்லது எண்ணெய் – ஒரு தேகரண்டி
தேங்காய் – அரை கப்
முந்திரி – பத்து
கசகசா – அரை ஸ்பூன்
பால் – முன்று கப்
வெள்ளம் கரைச்சல் – ஒன்றை கப்
ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்
நெய்யில் வருத்த முந்திரி திராட்சை –பத்து
அரைக்க தேவையான பொருட்கள்
(தேங்காய் , முந்திரி, கசகசா)
செய்முறை
பாசிப் பருப்பபை நன்றாக கழுவி தண்ணீர் உற்றி குக்கரில் போட்டு இரண்டு விசில் வந்தவுடன் எடுத்து மிக்ஸ்யில் ஒன்றும் பாதியாக அரைக்கவும். பின்பு ஒரு பாத்திரதை சூடாக்கி, நெய் அல்லது எண்ணெய் ஒரு தேகரண்டி ஊற்றி, அரைத்த பாசிப்பருப்பு விழுதை இதனுடன் சேர்த்து கிளறவும்.
பின்பு அரைத்த தேங்காய் , முந்திரி, கசகசா விழுதை போட்டு கிளறவும். பின்பு பால், வெள்ளம் கரைச்சல் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு ஏலக்காய் தூள், வருத்த முந்திரி, திராட்சை இதனுடன் சேர்த்து இரக்கவும். அசத்தலான பாசிப்பயிறு பாயாசம் உங்களுக்கு தயார்.