AwesomeCuisine.com Tamil Recipes Feed https://www.awesomecuisine.com Quick and easy recipes for you Fri, 14 Dec 2018 08:59:45 +0000 https://wordpress.org/?v=5.0.1 hourly 1 https://wordpress.org/?v=5.0.1 கிறிஸ்மஸ் கேக் https://www.awesomecuisine.com/recipes/26211/christmas-cake-in-tamil.html https://www.awesomecuisine.com/recipes/26211/christmas-cake-in-tamil.html#respond Thu, 13 Dec 2018 10:33:26 +0000 Praveen Kumar https://www.awesomecuisine.com/?p=26211 ஒரு சுவையான மற்றும் எளிதான செய்ய கூடிய கிறிஸ்துமஸ் கேக். சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு கேக் இது.

Christmas Cake (கிறிஸ்மஸ் கேக்)

தேவையான பொருட்கள்

  • மைதா – 300 கிராம்ஸ்
  • சக்கரை – 250 கிராம்ஸ்
  • முட்டை – 4
  • பேகிங் பவுடர் – 1கிராம்
  • பட்டர் – 150 கிராம்
  • டூட்டி ப்றுடி – தேவைகேற்ப
  • திராட்சை – தேவைகேற்ப
  • வன்னில கலர் –  தேவைகேற்ப
  • முந்திரி – 50 கிராம்
  • செர்ரி – 50 கிராம்
  • வால்நட் – 50 கிராம்

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவை தெளித்து கொள்ளவும்.
  2. இதனுடன் திராட்சை, முந்திரி சிறிதாக வெட்டி சேர்த்துகொள்ளவும்.
  3. வன்னில கலருடன்  உருகிய பட்டர் மற்றும் சக்கரை சேர்த்து  கொள்ளவும்.
  4. அத்துடன் முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. இந்த கலவை எடுத்து மைக்ரோ அவன் பாத்திரத்தில் 120 டிகிரி சூட்டில் அரை மணி நேரம் வைக்கவும்.
  6. சூடான சுவையான கிறிஸ்மஸ் கேக் ரெடி.
]]>
காய்கறி மசால் வடை https://www.awesomecuisine.com/recipes/25736/vegetable-masala-vadai-in-tamil.html https://www.awesomecuisine.com/recipes/25736/vegetable-masala-vadai-in-tamil.html#respond Fri, 17 Aug 2018 10:27:30 +0000 Praveen Kumar https://www.awesomecuisine.com/?p=25736 மசால் வடை ஒரு மிகவும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி.

Vegetable Masala Vadai

படம் எடுத்துக்காட்டுக்கு மட்டும்.

தேவையான பொருட்கள்

  • முட்டை கோஸ் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • கேரட் – இரண்டு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
  • பச்சை பட்டாணி – இரண்டு டீஸ்பூன்
  • துவரம் பருப்பு – அரை கப் (ஊறவைத்தது)
  • பச்சை மிளகாய் – இரண்டு
  • சீரகம் – அரை டீஸ்பூன்
  • பட்டை – ஒன்று
  • சோம்பு – கால் டீஸ்பூன்
  • உப்பு – தேவைகேற்ப
  • கடுகு – கால் டீஸ்பூன்
  • கரிவேபில்லை – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. முட்டை கோஸ், கேரட், வெங்காயம், பச்சை பட்டாணி, ஊறவைத்த துவரம் பருப்பு, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, பட்டை, உப்பு, கரிவேபில்லை, கொத்தமல்லி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.
  2. பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை போல் தட்டி அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

 

 

]]>
கொத்தமல்லி நூடல்ஸ் சூப் https://www.awesomecuisine.com/recipes/25665/coriander-noodles-soup.html https://www.awesomecuisine.com/recipes/25665/coriander-noodles-soup.html#respond Fri, 03 Aug 2018 09:39:12 +0000 Praveen Kumar https://www.awesomecuisine.com/?p=25665 எலுமிச்சை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றால் சுவைமிக்க நூடுல்ஸ் கொண்ட ஆரோக்கியமான தெளிவான சூப்.
Clear Noodle Soup
Image is only for illustration purposes and not that of the actual recipe
தேவையான பொருட்கள்

  • நூடல்ஸ் – கால் கப் (உப்பு போட்டு வேகவைத்த நூடல்ஸ்)
  • எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
  • வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)
  • கொத்தமல்லி ஜூஸ் – அரை கப்
  • பீன்ஸ் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)
  • கேரட் – இரண்டு டீஸ்பூன் (நறுக்கியது)
  • ஸ்வீட் சோளம் – இரண்டு டீஸ்பூன்
  • எலுமிச்சை பழம் சாறு – ஒரு டீஸ்பூன்
  • மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
  • சீரக தூள் – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவைகேற்ப
செய்முறை
  1. கடாயில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் ஊற்றி அதில் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி எடுத்து கொள்ளவும்.
  2. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பீன்ஸ், கேரட், ஸ்வீட் சோளம் சேர்த்து நான்கு நிமிடம் வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. காய்கள் வெந்ததும் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டிய கொத்தமல்லி சாறு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு மிளகு தூள், சீரக தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி எலுமிச்சை பழம் சாறு சேர்த்து கலக்கி பரிமாறவும்.
image via ]]>
கோதுமை ஆப்பிள் அல்வா https://www.awesomecuisine.com/recipes/25623/wheat-apple-halwa-in-tamil.html https://www.awesomecuisine.com/recipes/25623/wheat-apple-halwa-in-tamil.html#respond Thu, 26 Jul 2018 07:24:17 +0000 Praveen Kumar https://www.awesomecuisine.com/?p=25623 கோதுமை ஆப்பிள் அல்வா ஒரு சிறந்த குழந்தை உணவு.  ஆப்பிள் மற்றும் கோதுமைகளை உங்கள் குழந்தைக்கு தனித்தனியாக அறிமுகப்படுத்திய பிறகு, 8 மாதங்களில் இது குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

Wheat Apple Halwa (கோதுமை ஆப்பிள் அல்வா)

தேவையான பொருட்கள்

  • ஆப்பிள் – இரண்டு (தோல் நீக்கி துருவி கொள்ளவும்)
  • கோதுமை மாவு – ஒரு கப்
  • நெய் – தேவையான அளவு
  • முந்திரி – பத்து நம்பர்
  • பால் – 35௦ மில்லி லிட்டர்
  • ஏலக்காய் தூள் – ஒரு டீஸ்பூன்
  • கலர் பவுடர் – சிறிதளவு
  • சர்க்கரை – 1௦௦ கிராம்

செய்முறை

  1. கடாயில் நெய் சிறிதளவு ஊற்றி காய்ந்ததும் முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. அதே கடாயில் கோதுமை மாவு சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. பின், வறுத்த கோதுமை மாவை தண்ணீரில் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் பால், ஏலக்காய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து துருவிய ஆப்பிள் சேர்த்து கிளறவும்.
  5. பின், கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
  6. சர்க்கரை சேர்த்து கிண்டவும். பிறகு, நெய், கலர் பவுடர் சேர்த்து கிளறவும்.
  7. இறுதியில், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கி விடவும்.

image via gkfooddiary

]]>
கேரட் ஊருகாய் https://www.awesomecuisine.com/recipes/25391/carrot-pickle-in-tamil.html https://www.awesomecuisine.com/recipes/25391/carrot-pickle-in-tamil.html#respond Tue, 05 Jun 2018 09:17:03 +0000 Praveen Kumar https://www.awesomecuisine.com/?p=25391 ஒரு ருசியான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய கேரட் ஊறுகாய்.

Carrot Pickle Recipe in Tamil

தேவையான பொருட்கள்

  • கேரட் – கால் கிலோ (துருவியது)
  • எலுமிச்சை பழம் – ஐந்து
  • பச்சை மிளகாய் – பத்து (பொடியாக நறுக்கியது)
  • பெருங்காயம் – அரை டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ஒரு தேகரண்டி
  • கடுகு – ஒரு தேகரண்டி
  • உப்பு – தேவைகேற்ப
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

  1. ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.
]]>