காலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ் Recipe

By | Published , Last Updated: July 21, 2014 | Tamil | No Comment

Green Peas

தேவையான பொருட்கள்

காலிஃபிளவர் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

பச்சை பட்டாணி – கால் கப்

சின்ன வெங்காயம் – ஐந்து (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – மூன்று (நறுக்கியது)

பூண்டு – ஐந்து பல் (பொடியாக நறுக்கியது)

மிளகு தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்

கரிவேபில்லை – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பிறகு, சிறிது உப்பு, கரிவேபில்லை, பச்சை பட்டாணி சேர்த்து மூன்று நிமிடம் வேகவிடவும்.

பின், துருவிய அல்லது பொடியாக நறுக்கிய காலிஃபிளவர், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

வெந்ததும் மிளகு தூள் மற்று தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

Feel free to comment or share your thoughts on this recipe of காலிஃபிளவர் பச்சை பட்டாணி பொடிமாஸ் from Awesome Cuisine.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected: